உள்நாடு

இரண்டு நாட்களுக்கு மேல் காய்ச்சலா, உடனடியாக மருத்துவ ஆலோசனை​யை பெறவும்

(UTV | கொழும்பு) –  இரண்டு நாட்களுக்கு மேல் காய்ச்சல் இருந்தால் உடனடியாக மருத்துவ ஆலோசனை​யை பெறுமாறு பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர், வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

டெங்கு நோய் காரணமாக தற்போது உயிரிழப்புகள் அதிகரித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

டெங்கு நோய் கொரோனாவைப் போல் இல்லை எனவும் சமூக இடைவௌியை கடைபிடிப்பதால் அதில் இருந்து பாதுகாப்பு பெற முடியாது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

மாகாணங்களுக்கு இடையிலான பேரூந்து போக்குவரத்து சேவை ஆரம்பம்

பொதுமக்கள் அவசரகால நிலை : நாளை விசேட கூட்டம்

இன்றும் மழையுடன் கூடிய காலநிலை