உள்நாடு

இரண்டு கோடிக்கும் பெறுமதியுடைய ஹெரோயினுடன் ஒருவர் கைது

(UTV | கொழும்பு) – இரண்டு கோடி ரூபாய்க்கும் அதிக பெறுமதியுடைய ஹெரோயினுடன் 40 வயதான சந்தேக நபர் இராஜகிரிய பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் நேற்று (16) முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இரண்டு பொதிகளில் ஹெரோயின் கைப்பற்றப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

சந்தேகநபரிடமிருந்து 2 கிலோ 245 கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் அவர் கொழும்பு போதைப்பொருள் ஒழிப்பு பணியகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

Related posts

புத்தளம் நோக்கிய ரயில் சேவையில் பாதிப்பு

சிறுமியின் கை கொழும்பு பல்கலைக்கழகத்தில்!

ரணிலுக்கும், அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்திற்குமிடையில் சந்திப்பு!