உள்நாடு

இரண்டு அத்தியாவசிய பொருட்களின் விலை குறைப்பு!

எதிர்வரும் தமிழ் – சிங்கள புத்தாண்டை முன்னிட்டு மேலும் இரண்டு அத்தியாவசிய பொருட்களின் விலை குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சதொச நிறுவனம் (Lanka Sathosa) விடுத்துள்ள அறிக்கை ஒன்றில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

பொருட்களின் விலைக் குறைப்பு தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

இதன்படி, இறக்குமதி செய்யப்படும் பெரிய வெங்காயத்தின் விலை 55 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 320 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், வெள்ளை பச்சை அரிசி ஒரு கிலோ கிராமின் விலையை சதொச நிறுவனம் 4 ரூபாவால் குறைத்துள்ளது.

இதன்படி, ஒரு கிலோ கிராம் வெள்ளை பச்சை அரிசியின் புதிய விலை 185 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Related posts

யாழ்ப்பாணத்தில் மத வழிபாடுகளில் ஈடுபட்ட சஜித் பிரேமதாச

editor

இலங்கையில் அவசரகால நிலைமை : வர்த்தமானி வெளியானது

மேலும் மூன்று செயலாளர்கள் நியமனம்