கேளிக்கை

இரண்டாவது வாரத்தில் ‘தி லெஜண்ட்’ திரைப்படம்

(UTV |  சென்னை) – லெஜண்ட் சரவணன் முதல் முறையாக தயாரித்து கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் ‘தி லெஜண்ட்’. இப்படத்தின் மூலம் ஊர்வசி ரவுத்தலா கதாநாயகியாக தமிழில் அறிமுகமாகியுள்ளார்.

இந்த படம் ஜேடி-ஜெர்ரி இயக்கத்தில், ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் உருவாகியுள்ளது. தி லெஜெண்ட் மிகுந்த பொருட்செலவில் மிகப்பிரமாண்டமாக தயாரான இப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய 5 மொழிகளில் 2500- க்கும் அதிகமான திரையரங்குகளில் ஜூலை 28 அன்று வெளியானது.

ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுவரும் ‘தி லெஜண்ட்’ திரைப்படம் சிறப்பான வசூலை ஈட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், இப்படம் 2-வது வாரத்தில் அடியெடுத்து வைத்துள்ளது. மேலும் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

இளையராஜாவுக்கு பத்ம விபூஷண் விருது…

ஒரு அடார் லவ் திரைப்பட கிளைமாக்ஸ் மாற்றம்

மற்றுமொரு சினிமா பிரபலம் உயிரிழப்பு