வகைப்படுத்தப்படாத

இரண்டாவது முறை கர்ப்பமடைந்தால் முதல் குழந்தையிடம் எப்படி நடந்து கொள்ளவேண்டும்?

அன்பை உறுதிப்படுத்துங்கள்

அன்பை உறுதிப்படுத்துங்கள் கர்ப்ப காலத்தில் நீங்கள் மிகவும் பிஸியாகவும் ஓய்வாகவும் இருப்பீர்கள். இருந்த போதிலும், உங்கள் மூத்த குழந்தையின் மீது வழக்கத்தை விட அதிகம் கவனம் செலுத்துங்கள். அவர்களிடம் நிறைய உரையாடுங்கள். அவர்களிடம் வீட்டுக்கு வரப்போகும் புதிய உறவைப் பற்றி பேசுங்கள். வயிற்றில் வளரும் குழந்தைமீது இப்போதிருந்தே ஈர்ப்பு உண்டாகும்படி செய்யுங்கள். நீ ஒரு அண்ணனாக / அக்காவாக போகிறாய் என்பதை பற்றி விவரியுங்கள். வரப்போகும் அவர்களின் இளவலின் மீது அவர்களுக்கு அன்பும் பாசமும் ஏற்படும்படி செய்யுங்கள்.

நேரத்தை செலவிடுங்கள்

நேரத்தை செலவிடுங்கள் நீங்கள் இதற்கு முன் எப்போதும் எல்லா நேரத்தையும் உங்கள் மூத்த குழந்தையுடன் கழித்து இருப்பீர்கள். அனால் தற்போது இன்னொரு குழந்தை வயிற்றில் உள்ளது. நீங்கள் நேரமின்மையால் அவதிப்படுவீர்கள் என்றாலும் உங்கள் மூத்த குழந்தையிடம் தரமான நேரத்தை நீங்கள் செலவிட்டுத்தான் ஆகவேண்டும். அவர்களிடம் அவர்களின் இளம் வருகையைப் பற்றி உற்சாகத்தை ஏற்படுத்தவேண்டும்.

வார்த்தைகளில் கவனம் தேவை

சில நேரங்களில், நீங்கள் சொல்வது சரியானதுதான் என்றாலும் நீங்கள் ஒரு சின்னஞ்சிறிய குழந்தையை கையாளுகிறீர்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள். நீங்கள் எப்போதுமே பேசும் போது கவனமாக இருக்க வேண்டும், ஏனென்றால், நீங்கள் மூத்த குழந்தையை தீட்டினாலோ , கடிந்து கொண்டாலோ நீங்கள் தீட்டியதற்கு காரணம் சின்னக் குழந்தைதான் என்று தவறாக நினைத்துவிடுவார்கள். அவர்களின் கோபம் சின்ன குழந்தையின் மீது திரும்பிவிடும். வார்த்தைகளில் கவனம் தேவை.

 

 

Related posts

ජවිපෙ ‘‘පාද සටන’’ විරෝධතා පාගමන අද ඇරඹේ

Former DIG Dharmasiri released on bail

மஸ்கெலியாவில் காணாமல் போன அண்ணன் தங்கை சடலமாக மீட்பு