(UTV|கொழும்பு)- ஜப்பானுக்கான இரண்டாவது பயணிகள் விமானம் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து 157 பயணிகளுடன் பயணித்துள்ளது.
ஸ்ரீ லங்கன் விமான சேவைக்கு சொந்தமான யூ.எல்.454 இலக்க விமானம் ஜப்பானின் நரிடா நகரை நோக்கி பயணித்துள்ளது.
இதற்கு முன்னர் பாகிஸ்தான் மற்றும் லண்டன் நகரங்களுக்குமாக விமான சேவைகளை ஸ்ரீலங்கன் விமான சேவை முன்னெடுத்திருந்தமை குறிப்பிடதக்கது.