விளையாட்டு

இரண்டாம் நாள் முடிவில் மேற்கிந்திய தீவுகள் 414 ஓட்டங்கள்

(UTV|WEST INDIES)-மேற்கிந்திய தீவுகள் மற்றும் இலங்கை கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்ட முடிவில் மேற்கிந்திய தீவுகள் அணி 8 விக்கட்டுகளை இழந்து 414 ஓட்டங்களை எடுத்துள்ளது.

மேற்கிந்திய தீவுகள் அணி சார்பாக ஷேன் டாவ்ரிச் ஆட்டமிழக்காமல் 125 ஓட்டங்களை பெற்றுள்ளார்.

இலங்கை அணி சார்பில் லஹிரு குமார 4 விக்கட்டுகளை வீழ்த்தினார்.

இதனையடுத்து தனது முதல் இன்னிங்சில் துடுப்பெடுத்தாட ஆரம்பித்த இலங்கை அணி இதுவரை 10 ஓவர்களில் 03 விக்கட்டுக்களை இழந்து 33 ஓட்டங்களை பெற்றுள்ளது.

சந்திமால் ஆட்டமிழக்காமல் 3 ஓட்டங்களை பெற்றுள்ளதுடன், மெத்திவ்ஸ் 11 ஓட்டங்களைப் பெற்று ஆட்டமிழந்துள்ளார்.

3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதலாவது போட்டியின் நாணய சுழற்சியில் மேற்கிந்திய தீவுகள் அணி வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

பிரபல டென்னிஸ் வீரர் கொரோனாவினால் பாதிப்பு

கடனை பெற்றே மேற்கிந்திய வீரர்களுக்கு சம்பளம் வழங்கப்படுகிறது

மொஹமட் ஹபீஸுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம்