வகைப்படுத்தப்படாத

இரண்டாம் கட்ட தபால் மூல வாக்குப்பதிவு இன்று

(UTV|COLOMBO)-உள்ளூர் அதிகார சபை தேர்தலின் தபால் மூல வாக்களிப்புக்கான இரண்டாம் கட்டம் இன்று (25) இடம்பெறுகிறது.

தபால் மூல வாக்காளர்களுக்கு இன்று மற்றும் நாளை தபால் மூலம் வாக்களிக்கும் வாய்ப்பு வழங்கப்படுவதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

உள்ளூர் அதிகார சபை தேர்தலின் தபால் மூல வாக்களிப்பிற்கான முதற்கட்ட நடவடிக்கை 22 ஆம் திகதி தேர்தல் அலுவலகங்கள், மாவட்ட செயலகங்கள் மற்றும் பொலிஸ் நிலையங்களில் இடம்பெற்றன.

ஏனைய அரச அலுவலகங்கள், கல்வி அலுவலகங்கள், பாடசாலைகள், போக்குவரத்துச் சபை டிப்போக்கள், பாதுகாப்பு படை முகாம்கள் உள்ளிட்ட ஏனைய நிறுவனங்களில் தபால் மூல வாக்களிப்பு இன்றும் நாளையும் நடைபெறும்.

தபால் மூல வாக்குப்பதிவின் போது புகைப்படம் எடுப்பதை முழுமையாக தடை செய்துள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.

இதற்கிடையில், தேர்தல் சம்பந்தமான சுவரொட்டிகளை அகற்றுவதற்காக பொலிஸ் திணைக்களத்திற்கு 230 மில்லியன் ரூபா நிதியை தேர்தல்கள் ஆணைக்குழு வழங்கியுள்ளது.

இச்சுவரொட்டிகளை அகற்றும் பணிக்கு விசேட ஊழியர்கள் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

Related posts

வடகொரியாவில் தடுத்துவைக்கப்பட்டுள்ள அமெரிக்கர்கள் குறித்து பேச்சுவார்தை

தெற்கு அதிவேகநெடுஞ்சாலை வீதிப்போக்குவரத்து வழமைபோல்

Highest rainfall reported in Dunkeld estate