(UTV|கொழும்பு) – கிளிநொச்சி இரணைமடு விமானபடை முகாமில் தங்கவைக்கப்பட்டிருந்த 172 பேர் இன்று(04) வீடு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
இந்தியாவிற்கு சென்று நாடு திரும்பியவர்களே இவ்வாறு இரணைமடு விமானப்படை முகாமில் தங்கவைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டனர்.
இதுவரையில் தனிமைப்படுத்தலை நிறைவு செய்த 2 ஆயிரத்து 598 பேர் வீடு திரும்பியுள்ளதாக இராணுவ தளபதி மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.