உலகம்

இரட்டை கோபுர தாக்குதல் நடந்து இன்றுடன் 19 ஆண்டுகள்

(UTV | அமெரிக்கா)- அமெரிக்காவில் 2001 ஆம் ஆண்டு செப்டம்பர் 11 ஆம் திகதி இரட்டை கோபுர தாக்குதல் நடந்து இன்றுடன் 19 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.

அல்கொய்தா பயங்கரவாதிகள் விமானங்களை கடத்தி நியூயார்க்கில் உள்ள உலக வர்த்தக மையத்தின் இரட்டை கோபுர கட்டிடம் மற்றும் ராணுவ தலைமையகமான பென்டகன் மீது மோதி வெடிக்கச் செய்தனர்.

உலகையே உலுக்கிய இந்த தாக்குதலில் 3 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொன்று குவிக்கப்பட்டனர்.

மூன்றாவது விமானத்தை எர்லிங்டன் என்ற இடத்தில் உள்ள அந்நாட்டின் ராணுவ தலைமையகமான பென்டகன் மீது மோதச் செய்துள்ளனர். இதில் விமானத்தில் இருந்த 59 பேரும், பென்டகனில் இருந்த 125 இராணுவ வீரர்களும் உயிரிழந்தனர்.

அமெரிக்காவின் பெருநிலப்பரப்பில் மோசமான தீவிரவாத தாக்குதலின் தொடக்கத்திற்கான அறிவிப்பாக இந்த சம்பவம் நடைபெற்றது.

Related posts

கொவிட் 19க்கு மத்தியில் தென்கொரியாவில் தேர்தல்

சீனாவுக்கு ஆதரவாக கருத்துக்களை பரப்பும் கணக்குகள் 170 000 நீக்கம் : டுவிட்டர் அதிரடி

புதிய கட்சியை ஆரம்பித்திருக்கும் நடிகர் விஜய்!