விளையாட்டு

இரட்டைச் சதம் விளாசி சாதனை படைத்த ஏஞ்சலோ!!

(UTV|COLOMBO) இந்நாட்டு முதற்தர கிரிக்கட் போட்டிகளில் சகலதுறை வீரரான எஞ்சலோ பெரேரா வரலாற்றுச் சாதனையொன்றை புரிந்துள்ளார்.

முதற்தர போட்டியொன்றில் இரண்டு இன்னிங்ஸ்களிலும் இரட்டைச் சதம் விளாசி அவர் இந்த சாதனையை படைத்துள்ளார்.

என்.சி.சி அணியை பிரதிநிதித்துவப்படுத்தும் ஏஞ்சலோ பெரேரா எஸ்.எஸ்.சி அணியுடன் தற்போது இடம்பெற்றுவரும் போட்டியில் இந்த சாதனையை புரி்ந்துள்ளார்.

என்.சி.சி அணியின் முதல் இன்னிங்சில் ஏஞ்சலோ பெரேரா 201 ஒட்டங்களையும் , இரண்டாவது இன்னிங்சில் 231 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டார்.

28 வயதுடைய ஏஞ்சலோ பெரேரா என்.சி.சி அணியின் தலைவராக செயற்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

 

 

Related posts

வேகப்பந்து வீச்சாளர் மொஹமட் அமீர் மீண்டும் அணியில் இணைப்பு

இந்தியாவிற்கு பயணிக்க பாகிஸ்தான் வீரர்களுக்கு ‘விசா’

நாணய சுழற்சியில் பங்களாதேஷ் வெற்றி