Trending News

Update: இயற்கை அனர்த்தம் : உயிரிழந்தோரின் எண்ணிக்கை 177ஆக அதிகரிப்பு

(UDHAYAM, COLOMBO) – அனர்த்த நிலைமைகள் காரணமாக பலியானவர்களின் எண்ணிக்கை 177 ஆக உயர்வடைந்துள்ளது.

அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

109 பேர் காணாமல் போயுள்ளதுடன், 88 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிக மரண எண்ணிக்கை ரத்தினபுரி மாவட்டத்தில் பதிவாகியுள்ளது. அங்கு 71 பேர் மரணித்துள்ளனர்.

அதுபோல் களுத்துறை மாவட்டத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 53 ஆகவும், மாத்தறை மாவட்டத்தில் 21 பேரும் பலியானதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

சீரற்ற காலநிலை காரணமாக ஒரு லட்சத்து 28 ஆயிரத்து 586 குடும்பங்களைச் சேர்ந்த 4 லட்சத்து 71 ஆயிரத்து 542 பேர் இயற்கை அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

412 குடியிருப்புகள் முற்றாகவும், 4 ஆயிரத்து 266 குடியிருப்புகள் பகுதி அளவிலும் பாதிக்கப்பட்டுள்ளன.

அதுபோல் 75 ஆயிரத்து 236 பேர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் குறிப்பிட்டுள்ளது.

தற்காலிக முகாம்களின் தங்கவைக்கப்பட்டுள்ளவர்களின் அதிகமானவர்களும் ரத்தினபுரி மாவட்டத்தை சேர்ந்தவர்களே.

அந்த மாவட்டத்தை சேர்ந்த சுமார் 33 ஆயிரத்து 248 பேர் தற்காலிக முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

அதுபோல் கம்பஹா மாவட்டத்தில் 17ஆயிரத்து 147 பேரும் மாத்தறை மாவட்டத்தில் 9 ஆயிரத்து 370 பேரும் பாதுகாப்பான இடங்களில் தங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Update: – _______________________________________________________________

[accordion][acc title=”இயற்கை அனர்த்தம் : உயிரிழந்தோரின் எண்ணிக்கை 164ஆக அதிகரிப்பு”][/acc][/accordion]

(UDHAYAM, COLOMBO) – இயற்கை அனர்த்தத்தினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 164 ஆக அதிகரித்திருப்பதாக இடர்முகாமைத்துவ மத்திய நிலையம் இன்று காலை வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

காணாமல் போனோரின் எண்ணிக்கை 104 ஆகும். பாதிக்கப்பட்டுள்ளோரின் எண்ணிக்கை 4 இலட்சத்து 71 ஆயிரத்து 542 மற்றும் காயமடைந்தோரின் எண்ணிக்கை 88 ஆகும் என்றும் மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

336 நலன்புரி முகாம்களில் 75 ஆயிரத்து 236 பேர் தங்கியிருப்பதாக இடர்முகாமைத்துவ மத்திய நிலையம் மேலும் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

Click to comment


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top