வகைப்படுத்தப்படாத

இயற்கை அனர்த்தங்களால் பலியானவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு

(UDHAYAM, COLOMBO) – இயற்கை அனர்த்தங்கள் காரணமாக பலியானவர்களின் எண்ணிக்கை 164 ஆக உயர்வடைந்துள்ளது.

அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் இதனை அறிவித்துள்ளது.

இதனுடன் 104 பேர் காணாமல் போயுள்ள நிலையில், 88 பேர் காயமடைந்துள்ளனர்.

இயற்கை அனர்த்தங்களால் 28 ஆயிரத்து 586 குடும்பங்களைச் சேர்ந்த 4 லட்சத்து 71 ஆயிரத்து 542 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதனுடன் சீரற்ற காலநிலையால் 412 வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ள நிலையில், 4 ஆயிரத்து 266 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.

அத்துடன், 20 ஆயிரத்து 670 குடும்பங்களைச் சேர்ந்த 86 ஆயிரத்து 316 பேர், 290 தற்காலிக முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் குறிப்பிட்டுள்ளது.

Related posts

Sri Lanka launches new official map featuring Chinese investments

ஜோசப் ஜாக்சன் மரணம்

Heavy traffic near Nelum Pokuna, Green Path