உள்நாடு

இயற்கையின் கோரம் : 23 வயதுடைய யுவதியின் சடலம் மீட்பு

(UTV | கொழும்பு) – மாவனெல்லை, தெவனகல பிரதேசத்தில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி 4 பேர் காணாமல் போயுள்ள நிலையில் யுவதி ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மண்சரிவில் வீடு ஒன்று மண்ணில் புதையுண்டுள்ள நிலையில், மீட்புப் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் 23 வயதுடைய யுவதியின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, கேகாலை அல்கம பிரதேசத்தில் ஏற்பட்ட மண்சரிவு காரணமாக ஒருவர் உயிரழந்துள்ளதாக மாவட்ட செயலாளர் மஹிந்த எஸ். விஜயசூரிய தெரிவித்துள்ளார்.

அனர்த்தம் குறித்து குறித்த நபருக்கு முன்னதாகவே அறிவிக்கப்பட்டு அவரை வீட்டில் இருந்து வௌியேற கூறியிருந்ததாக அவர் மேலும் தெரிவித்தார்.

Related posts

ஹாபீஸ் நசீருக்கு தவிசாளர் அல்லது ஆளுநர் பதவியா?

கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை உயர்வு

நான்கு மாவட்டங்களுக்கு இரண்டாம் நிலை மண்சரிவு அபாய எச்சரிக்கை