உலகம்

இம்ரான்கானை வேறு சிறைக்கு மாற்றம்!

(UTV | கொழும்பு) –

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் (வயது 70) மீது ஊழல் குற்றச்சாட்டு உட்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதில் தோஷகானா ஊழல் வழக்கில் கடந்த மாதம் 5 ஆம் திகதி அவருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

எனவே, பஞ்சாப் மாகாணத்தில் உள்ள அட்டாக் சிறையில் அவர் சிறைதண்டனை அனுபவித்து வருகிறார். இதனையடுத்து அவரது உடல்நலம், சமூக மற்றும் அரசியல் நிலை ஆகியவற்றை கருத்தில் கொண்டு ஏ-வகுப்பு வசதிகள் கொண்ட சிறைக்கு மாற்றும்படி இம்ரான்கான் தரப்பில் வழக்கு தொடுக்கப்பட்டது.

இது குறித்த வழக்கு விசாரணை இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றத்தில் இடம்பெற்று வந்தது.  இந்தநிலையில் அவரை ராவல்பிண்டியில் உள்ள அடியாலா சிறைக்கு மாற்றுவதற்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

விடுமுறை கொண்டாட்ட நிகழ்ச்சியில் 44 உயிர் பலிகள்

தென்கொரியாவிடம் மன்னிப்பு கேட்ட கிம் ஜாங் உன்

யாரும் அமெரிக்கா நோக்கி வர வேண்டாம் : பைடன் திட்டவட்டம்