விளையாட்டு

இம்முறை IPL இல் சிறந்த பந்துவீச்சாளராக வனிந்து

(UTV |   மும்பை) – இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) கிரிக்கெட் போட்டியில் நேற்று சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 67 ஓட்டங்கள் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை வீழ்த்தியது.

அந்த போட்டியில் சிறப்பாக பந்து வீசிய வனிந்து ஹசரங்க, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதன்படி வனிந்து ஹசரங்க இந்த ஐபிஎல் போட்டியில் பந்துவீச்சாளர் ஒருவரின் சிறந்த பந்துவீச்சை பதிவு செய்துள்ளார்.

ஐபிஎல் தொடரில் ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர் வனிந்து ஹசரங்க. மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதின.

நாணய சுழற்சியில் வென்ற ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி முதலில் துடுப்பாட்டத்தினை தேர்வு செய்தது. 193 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 19 ஓவரில் 125 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது.

Related posts

முதலாவது இருபதுக்கு – 20 கிரிக்கெட் போட்டியில் தென்னாபிரிக்க அணி வெற்றி

இலங்கை கிரிக்கட் அணியின் பிரபல வீரர் கைது (PHOTO)

இன்றுடன் 25 ஆண்டுகள் நிறைவு