விளையாட்டு

இம்முறை இலங்கை சார்பில் மில்கா

(UTV | கொழும்பு) – 2020ம் ஆண்டுக்கான டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் ஜிம்னாஸ்டிக்ஸ் போட்டிக்கு இலங்கை சார்பில் மில்கா கெஹானி கலந்து கொள்ளவுள்ளார்.

ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்வதற்காக தெரிவு செய்யப்பட்ட இரண்டாவது இலங்கை போட்டியாளர் இவர் ஆவர்.

இதற்கு முன்னர் குதிரை சவாரி போட்டியில் கலந்து கொள்வதற்காக இலங்கை சார்பில் மெட்டில்டா கார்ல்சன் தெரிவு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஒலிம்பிக் குதிரை சவாரி போட்டியில் கலந்து கொள்ளும் முதலாவது இலங்கையர் இவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related posts

அக்சர் படேலுக்கு கொரோனா

இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தின் தலைவராக ஜஸ்வர் உமர் நியமனம்

கிரிக்கெட் தெரிவுக்குழு 5 முக்கிய தீர்மானங்கள்