உள்நாடு

இம்முறையும் ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவுக்கு பிணை வழங்க மறுப்பு

(UTV | கொழும்பு) –   புத்தளம் மேல் நீதிமன்ற நீதிபதி பிணை வழங்க சட்டமா அதிபர் சம்மதம் தெரிவித்த போதிலும், அது தனது அதிகார வரம்பிற்கு உட்பட்டது அல்ல என்பதனால் பிணை உத்தரவை நீதிபதி நிராகரித்துள்ளார்.

2022ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 9ஆம் திகதி மேன்முறையீட்டு நீதிமன்றில் பிணை கோருமாறு வாதிகளுக்கு நீதிபதி அறிவித்தார்.

சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவுக்கு பிணை வழங்குவது தொடர்பான வழக்கு விசாரணை இன்று புத்தளம் மேல் நீதிமன்றில் இடம்பெற்றது. ஜனவரி 20 ஆம் திகதி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவிற்கு பிணை வழங்குவதற்கு சம்மதம் தெரிவிப்பதாக சட்டமா அதிபர் மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு அறிவித்தார்.

ஹிஜாஸ் ஹிஸ்புல்லா 2020 ஏப்ரல் 14 அன்று கைது செய்யப்பட்டு தடுப்புக்காவலில் வைக்கப்பட்டார். பொலிஸ் குற்றப்புலனாய்வு பிரிவில் 10 மாத காவலுக்குப் பிறகு, அவர் நீதிவான் முன் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலின் வேட்பாளர் யார்? விரைவில் தீர்மானம்

தமிழ் வாக்குகளுக்காக இராணுவத்தைக் ரணில் காட்டிக் கொடுக்கின்றார் – விமல் வீரவன்ச

கருணா அம்மான் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில்