(UTV | கொழும்பு) – இரு நாள் உத்தியோகப்பூர்வ விஜயத்தை மேற்கொண்டு சீன பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் வெய் ஃபெங் இலங்கை வருகை தரவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இம்மாதம் 27 ஆம் திகதி முதல் 29 ஆம் திகதி வரையில் அவர் இலங்கைக்கான விஜயத்தை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்போது இரு தரப்பு இராஜதந்திர நிரலுக்கமைவாக ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட பாதுகாப்பு துறைசார் முக்கியஸ்தர்களையும் சந்தித்து சீன பாதுகாப்பு அமைச்சர் கலந்துரையாடவுள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்படுகின்றது.
![](https://tam.utvnews.lk/wp-content/uploads/2021/02/utv-news-alert-2.png)