உள்நாடு

இம்மாதம் முதல் மின் கட்டணம் உயர்த்தப்படுவது உறுதி !

(UTV | கொழும்பு) – இம்மாதம் முதல் மின் கட்டணம் உயர்த்தப்படுவது உறுதி !

இந்த மாதம் முதல் செலவு அடிப்படையிலான மின்சார கட்டணத்தை நடைமுறைப்படுத்த அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக எரிசக்தி மற்றும் மின் சக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

மின்சாரத் துறைக்கான பொதுக் கொள்கை வழிகாட்டு நெறிமுறைகளைத் திருத்துவதற்கும் அங்கீகாரம் கிடைத்துள்ளதாகவும், அவரது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

( கடந்த வாரம் மின் கட்டணத்தை அதிக சதவீதத்தினால் அதிகரிப்பதற்கான யோசனை அமைச்சர் கஞ்சன விஜேசேகரவினால் அமைச்சரவையில் முன்வைக்கப்பட்டது. இந்த முன்மொழிவு மக்களிடையே கடும் அதிருப்தியை சந்தித்தது.

இந்த மின்கட்டண அதிகரிப்புக்கு எதிராக 69 இலட்சம் பேரின் கையொப்பத்துடன் கூடிய பொது மனுவொன்றுக்கான முதற்கட்ட கையொப்பம் நேற்று (09) மின்சார பாவனையாளர்கள் சங்கத்தினால் பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவிடம் கையளிக்கப்பட்ட இருந்தது.

மின் கட்டணத்தை அதிகரிக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கினாலும் அது நடைமுறைப்படுத்தப்படாது என ஆணைக்குழுவின் தலைவர் ஜானக ரத்நாயக்க தெரிவித்திருந்தமையும் குறிப்பிலிடத்தக்கது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

சந்தர்ப்பங்களை தவற விடாது நாம் ஒன்றிணைந்து செயலாற்ற வேண்டும் – புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் பிரதமர் ஹரிணி

editor

சில பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிப்பு!

திங்கட்கிழமை முதல் கருப்பு வாரம்