கேளிக்கை

இன்ஸ்டாகிராமில் ஒரு போஸ்ட் போட ரூ. 3 கோடி வாங்கும் ப்ரியா

(UTV |  சென்னை) – இன்ஸ்டாகிராமில் போஸ்ட் போட்டு அதிகம் சம்பாதிக்கும் பிரபலங்களின் பட்டியல் வெளியாகியிருக்கிறது. இதில் முதல் 30 இடங்களுக்குள் வந்திருக்கும் இரண்டு இந்தியர்கள் விராட் கோஹ்லியும், நடிகை ப்ரியங்கா சோப்ராவும் தான்.

இன்ஸ்டாகிராமில் போஸ்ட் போட்டு அதிகம் சம்பாதிக்கும் பிரபலங்கள் பட்டியலில் நடிகை ப்ரியங்கா சோப்ராவுக்கு 27வது இடம் கிடைத்திருக்கிறது.

திரையுலக பிரபலங்கள், கிரிக்கெட் வீரர்கள் என்று பலரும் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கிறார்கள். அதிக ஃபாலோயர்கள் கொண்ட பிரபலங்களுக்கு பணம் கொடுத்து தங்கள் நிறுவன தயாரிப்புகளை விளம்பரம் செய்யுமாறு கூறுகிறார்கள். அவர்களும் விளம்பரம் செய்கிறார்கள். அப்படி இன்ஸ்டாகிராமில் போஸ்ட் போட்டு அதிகம் சம்பாதிக்கும் பிரபலங்களின் பட்டியல் வெளியாகியுள்ளது.

Hopper HQ நிறுவனம் வெளியிட்டுள்ள அந்த பட்டியலில் திரையுலக பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் மற்றும் பிறரின் பெயர்கள் இருக்கிறது. அந்த பட்டியலில் ப்ரியங்கா சோப்ராவின் பெயர் இருக்கிறது.

அந்த பட்டியலில் முதல் 30 இடங்களுக்குள் இரண்டு இந்தியர்கள் தான் இருக்கிறார்கள். அதில் ஒருவர் கிரிக்கெட் வீரர் விராட் கோஹ்லி, மற்றொருவர் நடிகை ப்ரியங்கா சோப்ரா. ப்ரியங்கா சோப்ராவை இன்ஸ்டாகிராமில் 64 மில்லியன் பேர் பின் தொடர்கிறார்கள். அவர் இன்ஸ்டாகிராமில் ஒரு விளம்பர போஸ்ட் போட ரூ. 3 கோடி வாங்குகிறார். இன்ஸ்டாகிராமில் பணக்கார பிரபலங்கள் பட்டியலில் ப்ரியங்காவுக்கு 27வது இடம் கிடைத்திருக்கிறது. கடந்த ஆண்டு வெளியான பட்டியலில் ப்ரியங்கா 19வது இடத்தில் இருந்தார்.

Related posts

சர்காரை மிஞ்சிய பிகில்

பாகுபலி விவகாரம்: சத்தியராஜ் அதிரடி அறிக்கை

இன்று பல கோடி சம்பளம் பெறும் நடிகர் அஜீத், 14 வருடங்களுக்கு முன்னர் பெற்ற சம்பளம் எவ்வளவு தெரியுமா??