உள்நாடு

இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம்

(UTVNEWS | கொழும்பு ) – மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை தொடர்ந்து நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

நாட்டிற்கு தெற்காக உள்ள கடற்பரப்புகளில் பல இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

Related posts

சீனாவிடமிருந்து 1500 மில்லியன் டொலர் கடன் பெறப்படும்

11 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை தொடரும்

இரண்டு நாட்களுக்கு மேல் காய்ச்சலா, உடனடியாக மருத்துவ ஆலோசனை​யை பெறவும்