சூடான செய்திகள் 1

இன்றைய வானிலை…

(UTV|COLOMBO) பெரும்பாலான பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை தொடர்ந்தும் நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

எனினும், ஊவா மாகாணத்திலும் இரத்தினபுரி, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் சில இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களில் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

(வளிமண்டலவியல் திணைக்களம்)

 

 

 

 

Related posts

பொதுமன்னிப்பு காலத்தில் 12,299 இராணுவ வீரர்கள் இணைவு

அனுமதி பத்திரமின்றி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த நால்வர் கைது

நில்வலா கங்கையின் நீர்மட்டம் அதிகரிப்பு