உள்நாடு

இன்றைய நாளுக்கான மின்வெட்டு அட்டவணை

(UTV | கொழும்பு) – நாட்டில் இன்றைய தினம்(29) மூன்று மணித்தியாலங்கள் மின் வெட்டு அமுலாக்கப்படவுள்ளதாக இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இலங்கை மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு இதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் அந்த ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, A முதல் L மற்றும் P முதல் w வரையான வலயங்களிலும், காலை வேளையில் 1 மணித்தியாலமும் 40 நிமிடங்களும், இரவு வேளையில் ஒரு மணி நேரமும் 20 நிமிடங்களும் மின் வெட்டு அமுலாக்கப்படவுள்ளது.

அதேநேரம், கொழும்பு முன்னுரிமை வலயங்களில் காலை 6.00 மணி முதல் 8.30 வரையான காலப்பகுதியில் 2 மணித்தியாலங்களும் 30 நிமிடங்களும் மின்வெட்டு அமுலாக்கப்படவுள்ளது.

இதுதவிர, M,N,O,X,Y,Z ஆகிய வலயங்களில் அதிகாலை 5.30 மணிமுதல் காலை 8.30 மணிவரையான காலப்பகுதியில் 3 மணித்தியாலங்கள் மின்வெட்டு அமுலாக்கப்படவுள்ளதாக இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

No photo description available.

Related posts

திலித் ஜயவீரவுக்கு அதிகரிக்கும் ஆதரவு

editor

ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக சமன் பதவியேற்பு

இன்று மாலை அமைச்சரவை கூடுகிறது