உள்நாடு

இன்றைய தினம் ஐந்து கொரோனா மரணங்கள் பதிவு

(UTV | கொழும்பு) –   நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளாகி மேலும் 5 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதனடிப்படையில் கொரோனா தொற்றிளால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 29 ஆக அதிகரித்துள்ளது.

பெண்கள் மூவர் மற்றும் ஆண்கள் இருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கொழும்பு 2 பகுதியை சேர்ந்த 46 வயதுடைய நபர் ஒருவர் கொரோனா தொற்றுக்குள்ளாகி பிம்புர வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று (04) உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

அத்துடன் வெல்லம்பிட்டிய பகுதியை சேர்ந்த 68 வயதுடைய பெண் ஒருவர் நெஞ்சு வலி காரணமாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் நேற்று உயிரிழந்துள்ளார்.

கொழும்பு 12 பகுதியை சேர்ந்த 58 வயதுடைய பெண் ஒருவர் அவரது வீட்டில் உயிரிழந்த நிலையில் மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனைகளில் அவர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உள்ளமை இனங்காணப்பட்டுள்ளது.

மேலும் கொழும்பு 14 பகுதியை சேர்ந்த 73 வயதுடைய பெண் ஒருவர் அவரது வீட்டில் உயிரிழந்த நிலையில் மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனைகளில் அவர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உள்ளமை இனங்காணப்பட்டுள்ளது.

இதேவேளை கொழும்பு 15 பகுதியை சேர்ந்த 74 வயதுடைய ஆண் ஒருவர் அவரது வீட்டில் உயிரிழந்த நிலையில் மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனைகளில் அவர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உள்ளமை இனங்காணப்பட்டுள்ளது.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

 

Related posts

மத்ரஸா மாணவனின் மர்ம மரணம்- மௌலவி உட்பட 4 சந்தேக நபர்கள் விளக்கமறியலில் வைப்பு

கட்சியின் தலைமைத்துவம் தொடர்பில் இறுதித் தீர்மானம் நாளை

சிறுபான்மை கட்சிகள் ரணிலுடன் – பொதுவேட்பாளராக ரணில்