உள்நாடு

இன்றைய தினம் ஏற்படும் சந்திர கிரகணம் ஸ்டோபெரி சந்திர கிரகணம்

(UTV | கொழும்பு) – பொசன் பௌர்ணமி தினமான இன்று(05) சந்திர கிரகணத்தை இலங்கை மக்கள் காண முடியும் என கொழும்பு பல்கலைக்கழகத்தின் பௌதீக விஞ்ஞான கல்விப் பீடத்தின் வானியல் மற்றும் விண்வெளி விஞ்ஞானப் பிரிவின் பேராசிரியர் சந்தன ஜயரத்ன தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டின் இரண்டாவது சந்திர கிரகணமான இந்த சந்திர கிரகணம் இன்று இரவு 11.15 மணிக்கு ஆரம்பமாகி மறுநாள் அதிகாலை 2.34 மணிக்கு நிறைவடையும் எனவும் அவர் கூறியுள்ளார்.

இன்றைய தினம் ஏற்படும் இந்த சந்திர கிரகணம் ஸ்டோபெரி சந்திர கிரகணம் என அமைக்கப்படுகிறது.

சூரியன், பூமி மற்றும் சந்திரன் ஆகியன ஒரே நேர்கோட்டில் வரும் போது சந்திர கிரகணம் ஏற்படுகிறது.

முழுமையான மற்றும் அரைவாசியான சந்திர கிரகணம் போல் இன்றைய தினம் சந்திரனை நிழல்கள் மறைக்காது என்பதால், இதனை வெறும் கண்களால் காண்பது கடினம் எனவும் சந்தர ஜயரத்ன குறிப்பிட்டுள்ளார்.

எனினும் சந்திரனின் ஒளி குறைந்து காணப்படும். இன்றைய தினம் நிகழும் இந்த சந்திர கிரகணத்தை இலங்கையில் மாத்திரமல்ல, இந்தியா, அவுஸ்திரேலியா, ஆபிரிக்கா, தென் அமெரிக்கா, பசுபிக், அட்லாண்டிக் சமுத்திரங்கள் மற்றும் அந்தாட்டிக்காக கண்டத்திலும் காண முடியும்.

Related posts

லிட்ரோ எரிவாயு விலை அதிகரிக்க தீர்மானம்

பேருந்துக்களில் ஒலிபரப்பாகும் பாடல்கள் தொடர்பில் நடவடிக்கை

12 துப்பாக்கிகளுடன் ஒருவர் கைது