உள்நாடு

இன்றைய தினமும் சுழற்சி முறையில் மின்துண்டிப்பு

(UTV | கொழும்பு) –   நாட்டில் இன்றைய தினமும் சுழற்சி முறையில் மின்துண்டிப்பை அமுலாக்க பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.

இதன்படி, A B C D E F G H I J K L ஆகிய வலயங்களில், காலை 8 மணிமுதல் மாலை 6 மணிவரையான காலப்பகுதிக்குள், இரண்டரை மணிநேரம் மின்தடை அமுலாக்கப்படவுள்ளது.

அத்துடன், குறித்த வலயங்களில் மாலை 6 மணி தொடக்கம் இரவு 11 மணிவரையான காலப்பகுதியில், ஒரு மணித்தியாலமும், 15 நிமிடங்களும் மின்சாரம் துண்டிக்கப்படவுள்ளது.

அதேநேரம், P Q R S T U V W ஆகிய வலயங்களில், முற்பகல் 10 மணிமுதல் பிற்பகல் 2 மணி வரையான காலப்பகுதியில், ஒரு மணி நேரமும்,

மாலை 4.30 முதல் இரவு 9.30 வரையான காலப்பகுதியில் ஒரு மணித்தியாலமும், 15 நிமிடங்களும் மின்தடை அமுலாக்கப்பட உள்ளதென பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

Related posts

எதிர்வரும் 26 திகதி திங்கட்கிழமை பொது விடுமுறைதினமாக அரசாங்கம் அறிவித்துள்ளது.

எட்டாவது நிறைவேற்று ஜனாதிபதி தேர்தலில் மூன்று வேட்புமனுக்கள்

சுயாதீன சங்கம் மத்திய வங்கிக்கு முன்னால் ஆர்பாட்டம்