சூடான செய்திகள் 1

இன்றைய காலநிலை…

(UTV|COLOMBO) தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் இலங்கைக்கு தென்கிழக்காக விருத்தியடைந்த தாழமுக்கமானது இன்று அதிகாலை02.00 மணிக்கு வட அகலாங்கு 4.0N இற்கும் கிழக்கு நெடுங்கோடு 88.1E இற்கும் அருகில் பொத்துவிலுக்குத் தென்கிழக்காக ஏறத்தாழ 800 கிலோமீற்றர் தூரத்தில் மையம் கொண்டுள்ளதாக வானிலை அவதான நிலையம் குறிப்பிட்டுள்ளது.

அந்த நிலையம் இன்று காலை வௌியிடுள்ள செய்தி அறிக்கையில் இதனை குறிப்பிட்டுள்ளது.

இது அடுத்த 12 மணித்தியாலங்களில் ஒரு ஆழமான தாழமுக்கமாகவும் தொடர்ந்து ஓரு சூறாவளியாகவும் விருத்தியடையக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக அந்த நிலையம் குறிப்பிட்டுள்ளது.

இத் தொகுதி வடமேற்கு திசையில் இலங்கையின் கிழக்குக்கரையை அண்டியதாகவும் விலகியும் நகரக்கூடுவதுடன் எதிர்வரும் 30ஆம் திகதி மாலை அளவில் (இந்தியா) வடதமிழ்நாட்டுக்கரையை அடையக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக வானிலை அவதான நிலையம் குறிப்பிட்டுள்ளது.

இதன்காரணமாக , நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மேகமூட்டமான வானிலை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மேல், தென், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களில் பல இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடும்.

 

 

 

 

 

Related posts

கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிராக அமெரிக்க நீதிமன்றத்தில் 10 முறைப்பாடுகள்

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் மற்றும் மூதூர் இளைஞர்கள் சந்திப்பு…

கொரோனா தொற்றுக்குள்ளான மற்றுமொரு நபர் உயிரிழப்பு (UPDATE)