சூடான செய்திகள் 1

இன்று(13) மாலை ஐ.தே.முன்னணியின் விஷேட பாரளுமன்ற குழுக் கூட்டம்

(UTV|COLOMBO)-ஐக்கிய தேசிய முன்னணியின் விஷேட பாராளுமன்ற  குழுக் கூட்டம் இன்று மாலை 6.00 மணிக்கு அலரிமாளிகையில் இடம்பெறவுள்ளது.

ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் இந்த கூட்டம் இடம்பெறவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

இதன்போது, முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு 117 பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு இருப்பதாக பாராளுமன்றில் நிறைவேற்றப்பட்ட பிரேரணை தொடர்பில் அவதானம் செலுத்தப்படவுள்ளது.

அத்துடன் தற்போதைய அரசியல் நிலவரம் மற்றும் உயர்நீதிமன்ற தீர்ப்பின் பின்னர் மேற்கொள்ள வேண்டிய செயற்பாடுகள் தொடர்பாக விரிவாக கலந்துரையாடப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

 

 

 

Related posts

8ஆவது நாளாகவும் தொடரும் பணிப்புறக்கணிப்பு

இலங்கையிலிருந்து குவைட்டுக்கு பணிபுரியச் சென்ற 41 இலங்கையர்கள் நாடு திரும்பினர்

வரவு செலவு திட்டத்தின் குழுநிலை விவாதத்தின் 16 ஆவது நாள் இன்று…