சூடான செய்திகள் 1

இன்று(07) முதல் ஆராதனைகளுக்காக திறக்கப்டும் கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயம்

(UTV|COLOMBO) உயிர்த்த ஞாயிறன்று தாக்குதலுக்கு இலக்கான, ​கொழும்பு- கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயமானது, ஆராதனைகளுக்காக மீண்டும் இன்று(07) முதல் திறக்கப்படுவதாக, இலங்கை கடற்படை அறிவித்துள்ளது.

காலை 7 மணியிலிருந்து இரவு 7 மணிவரை ஆராதனைகள் இடம்பெறவுள்ள நிலையில், திருப்பலி பூஜைகள் இடம்பெறாது என்றும் கடற்படையினர் அறிவித்துள்ளனர்.

எனவே தேவாலயத்துக்கு வருகைத் தருபவர்களின் பாதுகாப்புக்காக விசேட பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன், பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

 

Related posts

முல்லைத்தீவில் இடம்பெற்ற கோர விபத்தில் இருவர் பலி: நால்வர் படுகாயம்

தனியார் பேரூந்துகள் பணிப்புறக்கணிப்பில்

ஞானசார தேரருக்கு பொது மன்னிப்பு – கடிதம் சிறைச்சாலைகள் ஆணையாளரிடம்