சூடான செய்திகள் 1

இன்று(05) சபாநாயகர் தலைமையில் பாராளுமன்றம் கூடுகிறது

(UTV|COLOMBO)-சபாநாயகர் கரு ஜயசூரியவின் தலைமையில் இன்று (05) காலை  10.30 மணியளவில் பாராளுமன்றம் கூடவுள்ளது.

சர்வதேச பாராளுமன்ற சங்கம் மற்றும் பொதுநலவாய பாராளுமன்ற சங்கத்தில் காணப்படும் நிலையியல் கட்டளைகளுக்கு ஏற்பவே இதுவரை பாராளுமன்றத்தில் அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டதாக சபாநாயகர் கரு ஜயசூரிய அறிக்கையொன்றின் மூலம் நேற்று தெரிவித்திருந்தார்.

இந்தநிலையில், இன்றைய பாராளுமன்ற அமர்வைப் புறக்கணிப்பதற்கு ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு நேற்று முற்பகல் தீர்மானித்திருந்தது.

பாராளுமன்றத்தின் அடுத்தகட்ட நகர்வுகள் தொடர்பில் இன்று காலை இடம்பெறும் கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் என ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

 

 

 

 

 

Related posts

பாடசாலை மாணவன் தூக்கிட்டு தற்கொலை…

இலங்கை இணையத்தளங்கள் மீது சைபர் தாக்குதல்..!

தேர்தல் ஆணைக்குழுவின் அறிக்கையை நிராகரித்த கிழக்கு ஆளுநர்!