உள்நாடு

இன்று 12 மணி நேர நீர் விநியோகத்தடை

(UTV | கொழும்பு) – அத்தியாவசிய திருத்தப்பணிகள் காரணமாக கொழும்பின் சில பகுதிகளில் இன்று(12) 12 மணித்தியால நீர் விநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

இதற்கமைய, கொழும்பு 09, 10, 11, 12, 13, 14 மற்றும் 15 ஆகிய பகுதிகளில் 12 மணி நேர நீர் விநியோகத்தடை அமுலாக்கப்படவுள்ளது.

குறித்த பகுதிகளில் இன்று இரவு 10 மணி முதல் நாளை முற்பகல் 10 மணி வரையில் இந்த நீர் விநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை குறிப்பிட்டுள்ளது.

Related posts

இலங்கையில் குழந்தைகளுக்கான வளர்ப்பு பெற்றோர் முறைமையை உடனடியாக ஆரம்பிக்க திட்டம்

ஶ்ரீலங்கன் விமான சேவையைக் கொள்வனவு செய்யும் முயற்சியில் தம்பிக்க!

CEYPETCO, IOC எரிபொருள் விலைகளில் அதிகரிப்பு