உள்நாடு

இன்று 12 மணித்தியால நீர் வெட்டு

(UTV | கொழும்பு) – நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை 12 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகத்தை நிறுத்த தீர்மானித்துள்ளது.

இதன்படி, இன்று (28) இரவு 10 மணி முதல் நாளை (29) காலை 10 மணி வரை தற்காலிகமாக நீர் விநியோகம் தடைப்படவுள்ளது.

இந்த காலப்பகுதியில் கொழும்பின் 02, 03, 04, 05, 07, 08 மற்றும் 10 ஆகிய பகுதிகளுக்கு நீர் விநியோகம் நிறுத்தப்படவுள்ளதுடன், கொழும்பு கழிவு நீர் முகாமைத்துவ திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் அத்தியாவசிய முன்னேற்றம் காரணமாக இந்த நீர்வெட்டு அமுல்படுத்தப்பட்டுள்ளது.

Related posts

சம்பள உயர்வு: உணர்ச்சி வசப்பட்டு மேடையில் பொங்குவது, பட்டாசு வெடித்து பொங்கல் பொங்குவதை நிறுத்தவும்

பாகிஸ்தான் – இலங்கைக்கு இடையிலான கலாசார பாரம்பரியம், மத சுற்றுலாவை மேம்படுத்துவதில் சிறப்பு கவனம்

ஹம்பாந்தோட்டை நகர சபை தலைவர் கைது