(UTV|COLOMBO)-இன்று காலை 10.30க்கு பாராளுமன்ற அமர்வு ஆரம்பமாகவுள்ளது.
அதற்கு முன்னதாக காலை 9 மணிக்கு சபாநாயகர் கரு ஜெயசூரியவின் தலைமையில் விசேட கட்சித் தலைவர்கள் கூட்டம் இடம்பெறும்.
இதன்போது பாராளுமன்றத் தெரிவுக் குழு தொடர்பில் அவதானம் செலுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
12 உறுப்பினர்களைக் கொண்ட பாராளுமன்றத் தெரிவுக் குழுவில் பெரும்பாலான இடங்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு வலியுறுத்தி வருகிறது.
அதன்படி அந்த கட்சி 7 பேரை தெரிவுக் குழுவிற்கு பரிந்துரைத்துள்ளது.
ஆனால் பாராளுமன்றில் அதிக ஆசனங்களைக் கொண்ட தங்களுக்கே அதிக இடம் ஒதுக்கப்பட வேண்டும் என்று ஐக்கிய தேசிய முன்னணி தெரிவித்து வருகிறது.
இதன்படி ஐக்கிய தேசிய கட்சி சார்பாக 5 பேரையும், ஜேவிபி மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பாக தலா இரண்டு பேர் அடிப்படையில் மொத்தமாக 9 பேர் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.
ஐக்கிய தேசிய கட்சியின் சார்பில் மனோகணேசன், லக்ஷ்மன் கிரியல்ல, பாட்டளி சம்பிக்க ரணவக்க, ரவுஃப் ஹக்கீம் மற்றும் ரிசாட் பதியுதீன் ஆகியோரை தெரிவுக் குழுவிற்கு பரிந்துரை செய்திருப்பதாக கூறப்படுகிறது.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் மாவை சேனாதிராஜா மற்றும் தர்மலிங்கம் சித்தார்த்தன் ஆகியோர் பரிந்துரைக்கப்படவுள்ளனர்.
ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் சார்பில், தினேஸ்குணவர்ன, விமல் வீரவன்ச, டிலான் பெரேரா, திலங்க சுமத்திபால, நிமால் சிறிபால டி சில்வா, மகிந்த சமரசிங்க, உதய கம்மன்பில மற்றும் எஸ்.பி.திஸாநாயக்க ஆகியோரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.
இது தொடர்பில் இன்றைய கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது.