உள்நாடு

இன்று முதல் Park & Ride பஸ் சேவை

(UTV | கொழும்பு) – இலங்கை போக்குவரத்து சபை இன்று (15) முதல் தினமும் Park & Ride பஸ் சேவையை ஆரம்பிக்கவுள்ளதாக போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த பஸ்கள் மாகும்புர, கடவத்தை மற்றும் கட்டுபெத்த ஆகிய இடங்களில் இருந்து காலை 6 மணி முதல் 8 மணி வரை சேவையில் ஈடுபடும் என்றும், மாலை 4 மணி முதல் 6 மணி வரை அந்த இடங்களுக்கு திரும்பும் என்றும் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

பொதுமக்கள் பாதுகாப்பாக வாகனங்களை விட்டு கொழும்புக்கு செல்ல முடியும் என அமைச்சர் தெரிவித்தார்.

காலை பத்து நிமிடங்களுக்கு ஒருமுறை பேருந்துகள் செல்லும் என்றும், திரும்பும் போது கொழும்பில் இருந்து ஒவ்வொரு 15 நிமிடங்களுக்கும் பேருந்துகள் புறப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்திருந்தார்.

தனியார் பேருந்துகள் Park & Ride சேவையின் ஒரு பகுதியாக இருக்கும் என்று அவர் குறிப்பிட்டார்.

Related posts

சதொச ஊடாக ஒரு தேங்காய் 130 ரூபாவுக்கு விற்பனை

editor

இன்றும் மழையுடன் கூடிய காலநிலை

கூட்டத்தை குழப்ப வந்த மு.க ஆதரவாளர்களை தெரிக்கவிட்ட ரஸ்மின்

editor