(UTV | கொழும்பு) – மேல் மாகாணத்தில் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இன்று (13) முதல் கொவிட் தடுப்பூசி வழங்கப்படுவத்றகான நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாக கொழும்பு மாநகர சபையின் தலைமை சுகாதார வைத்திய அதிகாரி ருவன் விஜயமுனி தெரிவித்துள்ளார்.
மேல் மாகாண முதியோர் இல்லங்களில் தடுப்பூசி வழங்கப்படவுள்ளதாக அவர் கூறினார்.
30 முதல் 59 வயதுக்குட்பட்டவர்களுக்கு தடுப்பூசி வழங்கும் திட்டம் நேற்று முன்தினம் நிறைவடைந்தமையும் குறிப்பிடத்தக்கது.
![](https://tam.utvnews.lk/wp-content/uploads/2021/01/utv-news.png)