உள்நாடு

இன்று முதல் ரயில் சேவைகள் வழமைக்கு

(UTV | கொழும்பு) – ரயில்வே நிலைய அதிபர்களின் பணிப்புறக்கணிப்பு கைவிடப்பட்டதை அடுத்து, இன்று(15) முதல் ரயில் சேவைகள் வழமைபோல இடம்பெறுவதாக ரயில்வே திணைக்கள பொதுமுகாமையாளர் தெரிவித்துள்ளார்.

நேற்று மாலை பணிப்புறக்கணிப்பு கைவிடப்பட்டதை அடுத்து, ரயில்வே நிலைய அதிபர்கள் கடமைக்கு சமூகமளித்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

ரயில்வே நிலைய அதிபர்கள் சங்கத்தின் உபதலைவரை பதவியிலிருந்து நீக்க ரயில்வே திணைக்கள பொதுமுகாமையாளர் நடவடிக்கை எடுத்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்து ரயில் நிலைய அதிபர்கள் சங்கம் நேற்று திடீர் பணிப்புறக்கணிக்கை மேற்கொண்டது.

இந்நிலையில், பதவி நீக்கப்பட்ட ரயில்வே நிலைய அதிபர்கள் சங்கத்தின் உபதலைவரை மீண்டும் அந்தப் பதவியில் அமர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டதை அடுத்து, ரயில் நிலைய அதிபர்கள் சங்கம் போராட்டத்தைக் கைவிட்டதாக தெரிவிகப்படுகின்றது.

Related posts

இந்தியாவின் தனித்துவமான சாதனை தொடர்பில் ஜனாதிபதியின் மனப்பூர்வமான வாழ்த்து

காலி மீன்பிடி துறைமுகத்தில் ஒருவர் பலி

அரசாங்க ஊழியர்களுக்கு திங்கள் சம்பளம்