உள்நாடு

இன்று முதல் மேலதிக ரயில்கள் சேவையில்

(UTV | கொழும்பு) –  பிரதான ரயில் மார்க்கங்களில் இன்று முதல் மேலதிக ரயில்கள் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன்படி, பிரதான மார்க்கத்தில் 64 ரயில்களும், கரையோர மார்க்கத்தில் 74 ரயில்களும், சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேலும், புத்தளம் மார்க்கத்தில் 26 ரயில்களும், களனிவெலி மார்க்கத்தில் 12 ரயில்களும் வடக்கு மார்க்கத்தில் 6 ரயில்களும் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளன.

அனைத்து ரயில் சேவைகளும் பயண நேரஅட்டவணையில் இணைக்கப்பட்டுள்ள போதிலும், நீண்டதூரப் பயணங்களுக்கான ரயில்கள் தொடர்ந்தும் இடம்பெறாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

 

Related posts

வாக்குச் சீட்டு அச்சிடும் பணிகள் 50 வீதம் நிறைவு

வெற்றிலைக்கேணி கடலில் ஒன்பதுபேரை கைது செய்த கடற்படை

ஆர்ப்பாட்டம் காரணமாக காலி வீதியில் கடும் வாகன நெரிசல்