உள்நாடு

இன்று முதல் மழைவீழ்ச்சி குறைவடையும் சாத்தியம்

(UTV | கொழும்பு) – நாட்டில் பெய்துவரும் பலத்த மழை இன்று (11) தொடக்கம் ஓரளவு குறைவடையக்கூடும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

மேல், சபரகமுவ, வட மேல் மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (11) காலை வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனிடையே வட மத்திய மாகாணத்தில் சிறிதளவிலான மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம் நாடு முழுவதும் மணித்தியாலத்திற்கு 40 – 50 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது

Related posts

அர்ஜூன் அலோசியஸின் பிணை மனு நிராகரிப்பு

editor

ஜனாதிபதிக்கும், வடக்கு கிழக்கு தமிழ் எம்.பிக்களுக்கும் இடையில் சந்திப்பு!

சம்பிக்க ரணவக்கவின் வாகன சாரதிக்கு பிடியாணை