உள்நாடு

இன்று முதல் புதிய பேரூந்து கட்டணங்கள் அமுலுக்கு

(UTV | கொழும்பு) – அமைச்சரவை அனுமதிக்கு ஏற்ப இலங்கை போக்குவரத்து சபை மற்றும் தனியார் பேருந்துகளுக்கான கட்டணம் 15 சதவீதத்தினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய குறைந்த பேருந்து கட்டணம் 17 ரூபாவில் இருந்து 20 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்தார்.

எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டமையை அடுத்து பேருந்து கட்டணத்தை அதிகரிப்பது தொடர்பில் போக்குவரத்து அமைச்சர் நேற்று இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் முன்வைத்த யோசனைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதற்கமைய செகுசு, அரைசொகுசு மற்றும் அதிவேக நெடுஞ்சாலை உள்ளிட்ட சகல பேருந்துகளுக்குமான கட்டணங்கள் அதிகரிக்கப்படுகின்றன.

Related posts

வாகன வருமான உத்தரவுப் பத்திர விநியோகம் இடைநிறுத்தம்!

பயணக்கட்டுப்பாட்டில் தளர்வில்லை

பொலிஸ்மா அதிபராக சி.டி. விக்கிரமரத்னவை மீண்டும் நியமித்துள்ளமை சட்டவிரோதம் – உதய கம்மன்பில