சூடான செய்திகள் 1

நாளை முதல் கடவுச்சீட்டுக்கான கட்டணங்கள் அதிகரிப்பு

(UTV|COLOMBO) கடவுச்சீட்டை பெற்றுக் கொள்ளும் போது அறவிடப்படுகின்ற கட்டணம் நாளை முதல் அதிகரிக்கப்படுவதாக குடிவரவு குடியகல்வு திணைக்களம் கூறியுள்ளது.

சாதாரண சேவை கடவுச்சீட்டை பெறுவதற்காக இதுவரை அறவிடப்பட்ட மூவாயிரம் ரூபா இன்றுமுதல் மூவாயிரத்து ஐநூறு ரூபாவாக அதிகரிக்கப்படுகின்றது.

ஒருநாள் சேவைக் கட்டணமாக இருந்த பத்தாயிரம் ரூபா இன்று முதல் பதினைந்தாயிரம் ரூபாவாக அதிகரிக்கப்படுகிறது.

இதேநேரம்  16 வயதுக்குட்பட்டவர்களுக்கான விஷேட கடவுச்சீட்டுக்கு சாதாரண சேவையின் போது 2000 ரூபாவில் இருந்து 2500 ரூபாவாகவும், ஒருநாள் சேவையின் போது 5000 ரூபாவில் இருந்து 7500 ரூபாவாகவும் அதிகரிக்கப்படுவதாக குடிவரவு குடியகல்வு திணைக்களம் கூறியுள்ளது.

2019ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் படி இந்த அதிகரிப்பு நடைமுறைக்கு வருகிறது.

 

 

 

 

 

 

 

Related posts

UPDATE-சுதந்திரக் கட்சிக்கும்,பொதுஜன பெரமுன முன்னணிக்கும் இடையில் அடுத்தகட்ட சந்திப்பு தற்பொழுது ஆரம்பம்

தூபியில் ஏறிப் புகைப்படம் எடுத்த மாணவர்கள் விடுதலை

உண்மையான அரசியல்வாதிகள் யார் என்பதை மக்கள் தற்போது புரிந்து கொண்டுள்ளனர்