உள்நாடு

இன்று முதல் அமுலாகும் நாடாளாவிய ரீதியிலான பயணக்கட்டுப்பாடு

(UTV | கொழும்பு) – நாடாளாவிய ரீதியாக இன்று(23) இரவு 10 மணி முதல் 30 மணித்தியாலங்கள் பயணக்கட்டுப்பாடு அமுல்படுத்தப்படவுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

பொசொன் பூரணை காரணமாக மக்கள் ஒன்றுக்கூடுவதை தடுக்கும் நோக்கில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக அவர் கூறியுள்ளார்.

இதன்படி எதிர்வரும் 25 ஆம் திகதி அதிகாலை 4 மணியுடன் பயணக்கட்டுப்பாடு தளர்த்தப்படவுள்ளதுடன், வார இறுதி நாட்களில் கட்டுப்பாடு அமுல்படுத்தப்படுமா, இல்லையா? என்பது தொடர்பில் இதுவரை இறுதி தீர்மானம் எடுக்கப்படவில்லை.

Related posts

வேட்புமனுவை கையளித்தார் மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட்!

மைத்திரிபால சிறிசேனவுக்கு நீதிமன்ற அறிவிப்பு

கடந்த 24 மணித்தியாலத்தில் 735 : 04