உள்நாடு

இன்று முதல் அதிக வெப்பநிலை பதிவாகும்

(UTV|கொழும்பு) – சூரியனின் தென் திசை நோக்கிய தொடர்பான இயக்கத்தின் காரணமாக இன்று தொடக்கம் செப்டம்பர் மாதம் 07ஆம் திகதி வரை இலங்கையின் அகலாங்குகளுக்கு நேராக உச்சம் கொடுக்கவுள்ளதாக வானிலை அவதான நிலையம் குறிப்பிட்டுள்ளது.

இன்று(28) யாழ்ப்பாண மாவட்டத்தின் கரம்பன், கொக்குவில் மற்றும் சரசாலை ஆகிய பிரதேசங்களுக்கு மேலாக நண்பகல் 12.11 அளவில் சூரியன் உச்சம் கொடுக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் இவ்விடயம் தொடர்பாக அவதானத்துடன் செயற்படுமாறும் வானிலை அவதான நிலையம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

Related posts

மேலும் 100,000 பைஸர் தடுப்பூசிகள் இலங்கைக்கு

இம்ரான் கான் – பிரதமராக மாறிய ஒரு வெற்றிகரமான கிரிக்கெட்டர் வீரர்

பிரதமரால் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அழைப்பு