உள்நாடு

இன்று முதல் அதிகரிக்கப்பட்டுள்ள ரயில் சேவைகள்

(UTV | கொழும்பு) – சுகாதார வழிகாட்டுதல்களுக்கு அமைய தொடருந்து சேவைகளை இன்று முதல் முன்னெடுப்பதற்கு தீர்மானித்துள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய, இன்றைய தினத்தில் மாகாணங்களுக்கு இடையில் 30 ரயில்வே சேவைகள் இடம்பெறும் என குறித்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

அரச சேவையாளர் வழமைப்போன்று இன்று பணிக்கு அழைக்கப்பட்டுள்ளதால் விசேட ரயில் சேவைகளும் இடம்பெறவுள்ளன.

அத்துடன், எதிர்வரும் நாட்களில் தேவை ஏற்படும் பட்சத்தில் மேலும் ரயில் சேவைகளை அதிகரிக்கவுள்ளதாகவும் ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

Related posts

பூஸ்ஸ சிறைச்சாலை உண்ணாவிரதம் – இரண்டாவது நாளாகவும் தொடர்கிறது

இரட்டைக் கொலை நடந்தது என்ன?

கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 90 ஆக உயர்வு