உள்நாடு

இன்று புதிதாக மேலும் பல பிரதேசங்கள் முடக்கம்

(UTV | கொழும்பு) –  கொழும்பு மாவட்டத்தில் தற்போது தனிமைப்படுத்தப்பட்டிருக்கும் சில பிரதேசங்கள் இன்று அதிகாலை 05 மணி முதல் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்படுள்ளன.

டேம் வீதி பொலிஸ் பிரிவு
வாழைத்தோட்டம் பொலிஸ் பிரிவு
மருதானை பொலிஸ் பிரிவு போன்ற பிரதேசங்கள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளன.

கொம்பனிவீதி பொலிஸ் பிரிவின் வேகந்த கிராம உத்தியோகத்தர்பிரிவு,
ஹூணுப்பிட்டிய கிராம உத்தியோகத்தர் பிரிவு,
வெள்ளவத்தை பொலிஸ் பிரிவிலுள்ள மயூரா பிளேஸ்
பொரளை பொலிஸ் பிரிவின் ஹல்கஹவத்தை காளிபுள்ளவத்த,
வெல்லம்பிட்டி பொலிஸ் பிரிவில் லக்சந்த செவன வீடமைப்பு குடியிருப்பு என்பன தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளன.

எனினும் கொழும்பின் சில பிரதேசங்கள் தனிமைப்பட்ட பிரதேசங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.

வாழைத்தோட்டம் பொலிஸ் பிரவின் புதுக்கடை மேற்கு கிராம உத்தியோகத்தர் பிரிவு
அளுத்கடை கிழக்கு கிராம உத்தியோகத்தர் பிரிவு என்பன இன்று அதிகாலை 5 மணியில் இருந்து தனிமைப்பட்ட பிரதேசங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.

தனிமைப்படுத்தப்பட்டிருக்கும் ஏனைய பிரதேசங்கள் மறு அறிவித்தல் வரை தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்டிருக்கும் என கொவிட் தொற்று பரவலை தடுக்கும் செயற்பாட்டு மையம் அறிவித்துள்ளது.

இதேவேளை, இரத்தினபுரி மாவட்டத்தின் சில பிரதேசங்கள் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டிருப்பதாக கொவிட்19 வைரஸ் பரவலைத் தடுக்கும் செயற்பாட்டு மையத்தின் பிரதானியான இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

எஹலியகொட பிரதேச செயலகப் பிரிவில்
மின்னான
விலேகொட
யக்குதாகொட
அஸ்ககுல வடக்கு மற்றும் போபத்த கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டிருக்கின்றன.

கொடகவல பிரதேச செயலகப் பிரிவில்
ரக்குவானை நகர்
ரக்குவானை வடக்கு
ரக்குவான தெற்கு
மஸ்ஸிம்புல
கொட்டல ஆகிய கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

சுற்றுலா சென்ற பேருந்து விபத்து – 37 பேர் காயம்.

மொட்டுவின் வேட்பாளர் நிரோஷன் பிரேமரத்ன சஜித்துக்கு ஆதரவு.

editor

பேரீத்தம்பழ இறக்குமதிக்கு வரி விலக்க ஜனாதிபதியிடம் கோரிக்கை!