வகைப்படுத்தப்படாத

இன்று பிரதமர் நரேந்திர மோடி இந்தியாவின் பிரதமராக இரண்டாவது முறையாக பதவியேற்பு

(UTV|INDIA) பிரதமர் நரேந்திர மோடி இந்தியாவின் பிரதமராக இன்று இரண்டாவது முறையாக பதவியேற்க உள்ளதுடன் புதிய அமைச்சரவையும் நியமிக்கப்பட்டு, புதிய அரசாங்கமும் பதவியேற்க உள்ளது.

புதிய அரசாங்கத்தின் பதவியேற்பு வைபவம், புதுடில்லியில் உள்ள இந்திய குடியரசுத் தலைவர் மாளிகையான ராஸ்த்திரபதி பவனில் இன்றிரவு 7 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

இந்தியாவின் 14 ஆவது பிரதமராக கடந்த 2014 ஆம் ஆண்டு நரேந்திர மோடி பதவியேற்றார்.
இந்த நிலையில், மீண்டும் பிரதமராக தெரிவாகியுள்ள அவர், இந்தியப் பிரதமராக பதவியேற்கும் 16 ஆவது பிரதமராகவும் வரலாற்றில் பதிவாகியுள்ளார்.
இந்த வைபவத்தில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பங்களாதேஷ், நேபாளம், பூட்டான் உள்ளிட்ட மேலும் பல நாடுகளின் அரச தலைவர்கள் பங்கேற்க உள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மோடி தலைமையிலான இந்தியாவின் புதிய அமைச்சரவையில், முந்தைய அரசாங்கத்தில் பதவி வகித்த சில முக்கியமான அமைச்சர்கள் மீண்டும் இடம்பெறுவார்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது.

Related posts

பொதுமக்களின் பாதுகாப்பிற்காக பொலிசாரின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கு நடவடிக்கை

படகு கவிழ்ந்த விபத்தில் 10 பேர் உயிரிழப்பு

ரதுபஸ்வெல சம்பவம் – பிரிகேடியர் உள்ளிட்ட 4 பேர் விளக்கமறியில்