சூடான செய்திகள் 1

இன்று நீர் விநியோக தடை…

(UTV|COLOMBO)-களுத்துறை மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்று 15 மணித்தியால நீர் விநியோக தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

இலங்கை மின்சார சபையின் அத்தியாவசிய திருத்தப்பணிகள் காரணமாக கெத்ஹேன நீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கான மின்சார விநியோகம் துண்டிக்கப்படுகின்றமையே இவ்வாறு நீர் விநியோக தடைபடவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை குறிப்பிட்டுள்ளது.

இன்று காலை 8.30 முதல் இரவு 11.30 வரை நீர் விநியோக தடை அமுல்படுத்தப்படவுள்ளது.

இதன்படி வாத்துவ, வஸ்கடுவ, பொத்துபிட்டிய, களுத்துறை, நாகொடை மற்றும் கட்டுகுருந்த ஆகிய பகுதிகளில் இந்த நீர் விநியோக தடை அமுலாகவுள்ளதுடன்,இதுதவிர, பயாகல, பிலமினாவத்த, பொம்புவல, மக்கோன, பேருவளை, களுவாமோதர, மொரகல்ல, அளுத்கம தர்காநகர் மற்றும் பெந்தொட்டை ஆகிய பகுதிகளில் இந்த நீர் விநியோக தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

 

 

 

 

Related posts

இன்றைய வானிலை…

கான்ஸ்டபிள் ஒருவர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை

சாய்ந்தமருது பிரதேசத்திற்கு விஜயம் செய்துள்ள ஜனாதிபதி