சூடான செய்திகள் 1

இன்று நாடளாவிய ரீதியில் துக்க தினம் அனுஷ்டிப்பு

(UTV|COLOMBO)-இலங்கை சினிமா துறைக்கு பெரும் பங்காற்றிய கலாநிதி லெஸ்டர் ஜேம்ஸ் பீரிஸை கௌரவிக்கும் வகையில் இன்று (02) நாடளாவிய ரீதியில் துக்க தினமாக அனுஷ்டிக்க ஜனாதிபதி மற்றும் பிரதமர் தீர்மானித்துள்ளதாக அமைச்சர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.

அன்னாரின் பூதவுடல் இன்று (02) காலை தேசிய திரைப்படக்கூட்டுத்தாபனத்திற்கு அஞ்சலிக்காக கொண்டுவரப்பட்டு பின்னர் மாலை 6 மணிக்கு சுதந்திர சதுக்கத்தில் அன்னாருடைய இறுதிக்கிரியைகள் அரச அனுசரனையுடன் நடைபெற உள்ளது.

அத்துடன், அன்னாரின் பூதவுடல் தற்போது திம்பிரிகஸ்யாய, லெஸ்டர் ஜேம்ஸ் பீரிஸ் மாவத்தையில் உள்ள 24 ஆம் இலக்க இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

அரசியல் நெருக்கடியை தீர்க்க தலைவர்கள் முன்வரவேண்டும்

கரையோர ரயில் சேவை வழமைக்கு

தேசிய அடையாள அட்டைகளை வழங்குவதற்காக அறவிடப்படும் கட்டணங்களில் திருத்தம்