உள்நாடு

இன்று நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பு

(UTV | கொழும்பு) – இன்று (29) நள்ளிரவு முதல் அனைத்து மேலதிக நேர சேவை அமர்வுகளிலிருந்தும் விலகிக் கொள்ளும் வகையில் தொழிற்சங்க நடவடிக்கையொன்று முன்னெடுக்கப்படும் என புகையிரத இயந்திர சாரதிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக நாளை (30) 90 வீதமான புகையிரத பயணங்கள் இரத்து அல்லது தாமதமாக இடம்பெறும் என புகையிரத இயந்திர சாரதிகள் சங்கத்தின் செயலாளர் இந்திக்க தொடம்கொட தெரிவித்துள்ளார்.

புகையிரத சாரதிகள் குழுவை இலக்கு வைத்து அநியாயமாக மேலதிக நேரத்தை குறைத்தல், ஒவ்வொரு சேவைக்கும் புகையிரத சாரதிகளை நியமித்தல், பொல்கஹவெல, அளுத்கம, சிலாபம் மற்றும் மாத்தறை புகையிரத நிலையங்களில் புகையிரத சாரதிகளின் மேலதிக நேரம் தொடர்பில் ஊடகங்கள் மற்றும் கணக்காய்வு பிரிவினர் புகையிரத முகாமைத்துவத்தை உரிய முறையில் விளக்கமளிக்கவில்லை. புகையிரத சாரதிகளுக்கு பொறுப்பான அதிகாரிகளின் அலுவலகங்கள் ஸ்தாபிக்கப்படாத காரணத்தினால் இந்த நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

புகையிரத தொழிற்சங்கங்கள் இந்த வருடம் முன்னெடுத்த வேலைநிறுத்தப் போராட்டத்தினால் சுமார் பத்து நாட்களுக்கு புகையிரத சேவைகள் தடைபட்டமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

மேலும் 3 பேர் பூரண குணம்

சேவையில் இருந்து விலகிய முப்படையினருக்கு பொது மன்னிப்பு காலம் இன்று முதல் ஆரம்பம்

பொதுத் தேர்தல் தொடர்பில் தேர்தல் ஆணைக்குழுவில் கலந்துரையாடல்