சூடான செய்திகள் 1

இன்று நள்ளிரவு முதல் கோதுமை மாவின் விலை அதிகரிப்பு

(UTVNEWS | COLOMBO)  – கோதுமை மா கிலோகிராம் ஒன்றின் விலையானது இன்று(06) நள்ளிரவு முதல் 5.50 ரூபாயால் அதிகரிக்கப்படவுள்ளதாகவும், இது தொடர்பில், நாடு முழுவதுமுள்ள பிரிமா மா விநியோகத்தர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

எவ்வாறாயினும், நுகர்வோர் அதிகார சபையின் அனுமதியின்றி இவ்வாறு கோதுமை மாவின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் உரிமையை பாதுகாக்கும் அமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது.

2016ஆம் ஆண்டு ஜுலை மாதம் 14 ஆம் திகதி வெளியிடப்பட்ட 1975/68 என்ற விசேட வர்த்தமானி அறிவித்தலின்படி, அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ள கோதுமை மாவின் விலையை அதிகரிப்பது தொடர்பில் நுகர்வோர் அதிகார சபையின் அனுமதி பெறப்படவேண்டும் என, அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

Related posts

பாராளுமன்ற கலைப்பு தொடர்பிலான வர்த்தமானி அறிவித்தலுக்கான இடைக்காலத் தடை நீடிப்பு

ஐக்கிய தேசிய கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் இன்று

சஹ்ரானுடன் ஆயுத பயிற்சி – மூவர் அதிரடி கைது